குழந்தையான கண்ணன் கொடியவனான பகாசுரனைக் கொன்றான். இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரன் அகாசுரன், ஆயர்பாடிக்கு வந்தான். கண்ணன், அவனது அண்ணன் பலராமன், ஆயர்பாடி சிறுவர்களைக் கொல்ல முயற்சித்தான். விரும்பிய வடிவத்தில் தோன்றும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. எட்டு மைல் நீளம் கொண்ட பாம்பாக உருவெடுத்து பயமுறுத்தினான். அவனுடைய வாய் குகை போல இருந்தது. ஆனால் ‘கண்ணன் இருக்க கவலை எதற்கு?’ என அசுரனைப் பார்த்து சிறுவர்கள் சிரித்தனர். அசுரனின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் தோற்றத்தை விரிவுபடுத்த மூச்சு திணறினான். அவனது தலை சுக்குநுாறாக வெடித்து சிதறியது.