உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில் உள்ளது வம்சீவட் கோயில். கண்ணன் புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. ‘வம்சீ ’என்றால் புல்லாங்குழல். ‘வட்’ என்றால் ‘ஆலமரம்’. இங்கு அருள்புரியும் கண்ணனின் பெயர் ‘வம்சீவட் விஹாரி’. கோபியர்களுடன் விளையாடல் புரிவதைச் சித்திரிக்கும் ஓவியங்களை இங்கு தரிசிக்கலாம், மகான்களான ராமானுஜர், மத்வாச்சாரியாருக்கு சன்னதிகள் உள்ளன. மதுராவில் கண்ணன் அவதரித்த சிறைச்சாலையை ஒட்டி ‘கத்ரகேஷப் தேவ்’ என்னும் பெயரில் கண்ணனுக்கு கோயில் உள்ளது.