யமுனா நதிக்கரையில் அமைந்த பிரம்மாண்ட கட்டம் என்னும் படித்துறை சிறப்பு மிக்கது. கோபியரின் உடைகளை மரக்கிளைகளில் ஒளித்து வைத்து கிருஷ்ணர் திருவிளையாடல் நடத்தியது இங்கு தான். மண்ணை உண்ட குழந்தை கண்ணனின் வாய்க்குள் யசோதை ஏழுலகங்களையும் கண்டு பிரமித்ததும் இங்கு தான்.