Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ருக்மணி பூஜித்த கிருஷ்ணர் சக்குளத்துகாவு பகவதி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரிந்தவர் சேர அம்பைக்கு வாங்க
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
10:08


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியன்று பாலுாட்டும் வைபவம் நடக்கிறது. இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியர் சேர்வர்.    
பக்தரான சேர மன்னர் ஒருவருக்கு கிருஷ்ணர் கோயில் கட்டும் எண்ணம் எழுந்தது. ஒருநாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், ‘‘புண்ணிய நதியான தாமிரபரணி கரையிலுள்ள புன்னை வனத்தில் கோயில் கட்டு’’ என உத்தரவிட்டார்.    அதன்படி திருப்பணி நடந்த போது பாமா, ருக்மணி சிலைகளை தலைமைச் சிற்பி வடிவமைத்தார். அவரது கனவில் தோன்றி,  ‘‘இது போன்ற அழகிய சிலைகளை இதுவரை நான் பார்த்ததில்லை. இங்குள்ள பாமா, ருக்மணியரை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்’’  என கிருஷ்ணர் தெரிவித்தார். இங்குள்ள சுவாமி  ‘நித்ய கல்யாணப் பெருமாள்’  என அழைக்கப்படுகிறார். புல்லாங்குழலுடன் இருப்பதால் ‘வேணு கோபாலர்’ என்றும் பெயருண்டு. கருடசேவை, வைகுண்ட ஏகாதசி விழாக்களில் பாமா, ருக்மணி தாயார்களுடன் சுவாமி எழுந்தருள்கிறார்.  
 திருமணத் தடை நீங்கவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் சேரவும் சுவாமிக்கு துளசி மாலை சாத்தி நெய் விளக்கு ஏற்றுகின்றனர். சாளக்கிராம கல்லால் ஆனதால் சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு, பாலாபிஷேகம் மட்டுமே நடக்கிறது.   
 கிருஷ்ண ஜெயந்தியன்று காலையில் கண்திறப்பு, சங்குப்பால் என்னும் பாலுாட்டும் வைபவம் நடக்கும். சுவாமியின் முன் தேங்காயின் மூன்று கண்களை அர்ச்சகர்கள் திறப்பர். இதன் மூலம் குழந்தை கிருஷ்ணரே எழுந்தருளி கண் திறப்பதாக ஐதீகம். பிறகு சங்கில் பாலுாட்டுவது போல பாவனை செய்து நெல்லை படைத்து வழிபடுவர். நாடு செழிக்க வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக இதைச் செய்கின்றனர். பின்னர் விவசாயிகளுக்கு நெல் பிரசாதம் வழங்கப்படும். இதை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விளைச்சல் பெருகும்.
எப்படி செல்வது?
அம்பாசமுத்திரம் –  ஊர்க்காடு செல்லும் வழியில் கோயில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar