தேவகோட்டை: தேவகோட்டை கட்ட முருகப்பன் தெருவில் 20 ஆண்டுகள் ராமாயணம் சொற்பொழிவு நடத்திய இடத்தில் கவிஞர் அருசோமசுந்தரன் ராமாயண ராமர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண்டலபூஜையை தொடர்ந்து நேற்று சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு மண்டாலாபிஷேகம் நடந்தது. ராமர், லட்சுமணன், சீதை, பரதன் சத்ருகன் அனுமன், வால்மீகி , கம்பருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பேராசிரியர் சுப்பையா தலைமையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம், அபிராமி அந்தாதி முற்றோதல் பாடினர். கேவிபி பள்ளி நிறுவுனர் கார்மேகம், பேராசிரியர் குமரப்பன், சேவுகன் அண்ணாமலை பேசினர். குழந்தைகள் நடனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.