பதிவு செய்த நாள்
04
செப்
2021
03:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், தாயார்களுடன், பச்சைப் பட்டுடுத்தி அருள்பாலித்த அரங்கநாதர்.
அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலசந்தி பூஜைக்கு பின்பு, புண்ணியா வசனம், கலசா ஆவாகனம் ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாதர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள் மட்டும் கோவிலில் வலம் வந்து, ஆஸ்தானத்தை அடைந்தார். பின்னர் உச்சக்கால பூஜை, சாற்றுமுறை ஆகியவை நடந்தன. இதில் கோவில் ஸ்தலதார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.