பதிவு செய்த நாள்
04
செப்
2021
08:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு, சனி பிரதோஷத்தை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், அரிசி மாவு, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், எழுமிச்சை, பன்னீர், விபூதி உட்பட வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜையும், தீபாராதனையும் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் தலைமை அர்ச்சகர் துரைசாமி, துணை அர்ச்சகர்கள் ரஞ்சித், மனோஜ் குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.