பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
பாகூர்: பாகூரில் உள்ள மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு, வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது.செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்..