பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 10:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; வெண்பட்டு சாற்றி, வில்வார்ச்சனை நடந்தது. பிற்பகல் 12:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:30 மணியளவில், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கதம்பனேஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், மூலவர் கதம்பவனேஸ்வரர், கல்யாணசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.