* வருமானத்திற்கு ஏற்ப செலவு செய். உன் வாழ்க்கை மலரும். * உன்னை சீர்படுத்து. சமூகம் தானாகவே சீராகும். * வாழ்வில் நாடுவதற்குரிய ஒரே நபர் கடவுள் ஒருவரே. * ஒழுக்கத்தை கடைபிடி. மகிழ்ச்சியாக வாழலாம். * கடவுளே சத்தியம். சத்தியமே கடவுள். * நல்லவனாக இரு. நல்லதையே செய். * கடவுளின் திருநாமத்தை விடச் சிறந்தது கிடையாது. * வாழ்க்கையின் லட்சியத்தை அடைவதற்கான வழியே மதம். * துன்பத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் நாத்திகனும் கடவுளை வணங்குகிறான். * பணத்தை விட விலை உயர்ந்தது நேரம். * உனது துன்பத்தில் பங்கேற்பவனே உண்மையான நண்பன். * சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். * சோதனையை பொறுமையுடன் சகித்துக் கொள். * பொற்றோரின் புத்திமதிகளை கேள். * மற்றவரின் புகழை கெடுக்காதீர். * நண்பர்களை பெருக்காதீர். * நற்பண்பும், நற்செயல்களும் ஒருபோதும் வீண்போகாது. * ஒருநாட்டின் விதி அந்நாட்டின் பெண்கள் கையில்தான் உள்ளது. * இன்ப, துன்பங்களை சந்தித்த பிறகே ஒருவரின் மனம் பக்குவப்படுகிறது. * ஏற்ற, இறக்கமே வாழ்க்கையின் அடிப்படை.