பதிவு செய்த நாள்
07
செப்
2021
02:09
ஏரல்: ஏரல், சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் இன்று விழா நடக்கிறது. ஏரல் ஒன்பது ரு இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, சவுக்கை முத்தாரம்மன் கோயில் விழா கடந்த 31ம் தேதி கால்நாட்டு விழா நடந்தது. கொடை விழா நிகழ்ச்சியாக நேற்று இரவு ஊர் அழைப்பு, இரவு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் இன்று (7ம் தேதி) விழா நடக்கிறது.
இன்று காலை 8:00 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், 12:00 மணிக்கு மகா அபிஷேகம் மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, பின்ன அம்மன் கேடயரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலையில் தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்துவருதல், இரவு புஷ்ப அலங்கார தீபாராதனையை தொடர்ந்து பிரம்ம சக்தி அம்மன் கோயிலிருந்து அம்மன் கேடய ரத்தில் புறப்பட்டு பொன்சப்பரத்திற்கு வருதல், அம்மன் பொன்சப்பரத்தில் எழுந்தருளி வாத்தியங்களுடன் வாண வேடிக்கையுடன் நகர் வீதிவலம் வரும் நிகழ்ச்சியில் நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை,சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை தலைவர் குமரசேன்நாடார்தலைமையில் நிர்வாக கமிட்டியினர் செய்துவருகின்றனர்.