பதிவு செய்த நாள்
08
செப்
2021
11:09
உடுமலை: உடுமலை பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி விழா, ஆக.,31 ம் தேதி துவங்கி, நாள்தோறும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்விய பிரபந்தம் உட்பட பாசுரங்கள் சேவையுடன், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது.நேற்று திருவாய்மொழி பாசுரங்கள் சேவை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். நாளை (9ம் தேதி) மாலை, 3:30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம், வாரணமாயிரம் பாசுரங்கள் சேவை, ராமனுஜ நுாற்றந்தாதி சேவை, சாற்றுமறை, தீர்த்தப்பிரசாதம் வினியோகம் நடக்கிறது.