தேனி : தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீண் உமேஷ் டோங்ரே ஆகியோரிடம் ஹிந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் வழங்கிய மனுவில், பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே தடையை நீக்கி கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரினர்.