திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு மூலவர் பெரியாயிக்கு மகா அபிஷேகம், வெற்றிலை காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.இரவு 10:00 மணிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும், தீபாராதனை, கொரோனா தடை காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது.