ஊத்துக்கோட்டை : விநாயகர் சதுர்த்தி விழா வருவதை முன்னிட்டு, விநாயகர் கோவிலில் வர்ணம் பூசும் பணி துவங்கி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவான, வரும் 10ம் தேதி மாநிலம் முழுதும் ஒவ்வொரு தெருக்களிலும், 3 அடி முதல், 7 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.கடந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பொது இடங்களில் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.இந்தாண்டும், விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட எவ்வித தடையும் இல்லை என, அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில், வர்ணம் பூசும் பணி துவங்கி உள்ளது. இதேபோல் பெரும்பாலான விநாயகர் கோவில்களில் சுத்தப்படுத்தும் பணி துவங்கி உள்ளது.