Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவிலில் வர்ணம் பூசும் பணி பொது இடங்களில் விநாயகர் சிலை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு பொது இடங்களில் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாதசுவாமி கோவில் கொடிமரம் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வைத்தியநாதசுவாமி கோவில் கொடிமரம் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 செப்
2021
05:09

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில், சாஸ்த்ரா நிறுவனத்தால் காணிக்கையாக வழங்கப்பட்ட 5 கிலோ தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு தகடுகள் (ரேக்) பிரதிஷ்டை செய்து இன்று காலை   இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது  குருமகாசன்னிதானம் பங்கேற்றார்.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி,நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன்,தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர் இந்நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் திருப்பணியை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் செய்திடும் வகையில் 5கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கினார். இந்த தங்ககட்டிகள் தகடுகளாக மாற்றும் வகையிலான  பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப் Uட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது . முன்னதாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கி நடைபெற்றது என்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி , தீபாரதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் , தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன் , துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியன், தனிஷ்க், உற்பத்தி பிரிவு கோட்ட மேலாளர் இளங்கோவன் , தனிஷ்க் தெற்கு பிராந்திய வர்த்தக மேலாளர்  நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் மழை நீர் சேகரிப்பால் நிறைந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar