பதிவு செய்த நாள்
09
செப்
2021
08:09
புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது
இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:1.பொது இடங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு நெரிசல் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.2.பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் தனி நபர் அல்லது அமைப்பினர், காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை ஆராய்ந்து விநாயகர் சிலை வைக்க காவல் துறை அனுமதி கொடுக்கும்.ஒலி பெருக்கி வைப்பதாக இருந்தாலும், உள்ளாட்சி, பொதுப்பணித் துறைகளின் தடையில்லாத சான்றிதழுடன் காவல் துறையை அணுகி அனுமதி பெற வேண்டும்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சிலை வைக்கும் விழா குழுவினர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.விநாயகர் சிலை வழிபாட்டில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.விநாயகர் சிலை வழிபாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறதுசிலை கரைப்பு, போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக காவல் துறையினர் ஆய்வு செய்து, முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சிலை கரைப்பிற்காக வாகனங்களில் பேரணியாக பின் தொடர்ந்துவர அனுமதி இல்லை. சிலைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.