பதிவு செய்த நாள்
09
செப்
2021
02:09
சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலில் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கோவில் செயல் அலுவலர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 10 முதல், 21 வரை நடக்க உள்ளது. கொரோனாவால், செப்., 11, 12, 17, 18, 19ல் பக்தர்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியான, 10ல் ராஜகணபதிக்கு நடக்க உள்ள அபி?ஷகம், தங்க கவச சாத்துப்படி தரிசனத்தை, காலை, 10:30 மணிக்கும், 12ல் நடக்க உள்ள திருக்கல்யாண உற்சவம், அபி ?ஷகம், அலங்காரத்தை, இரவு, 7:00 மணிக்கு சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகும். பக்தர்கள், outube link: https://www.youtube.com/channel/UC9HIIIS1I2dd 4y2ikjKCc8g, Facebook link: https://www.facebook.com/Arulmigu-Sugavaneswarar-Temple-Salem எனும் கோவில் யு - டியூப் சேனல் வழியாக ஒளிபரப்ப, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடக்கும், 12 நாளும் தினமும் காலை, 6:00 மணிக்கு கணபதி ?ஹாமம், காலை, மதியம் அபி ?ஷகம், தீபாராதனை, மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கும். தடை செய்யப்பட்ட நாளில், பக்தர்கள் வீடுகளில் இருந்தே வழிபட வேண்டும்.