பந்தலுார்: பந்தலுார், கூடலுார் பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.பந்தலுார் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தது.அதில், அம்பலபாடி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் களிமண்ணை கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து, வண்ணம் பூசி பூஜை செய்துள்ளனர். பந்தலுார் பகுதியில், இந்து முன்னணி; வி.எச்.பி., சார்பில் பூஜிக்கப்பட்ட, 23 சிலைகள் பொன்னானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. கூடலுார் பகுதியில், இந்து முன்னணி; வி.எஸ்.பி., சார்பில், 63 சிலைகள், அப்பகுதியில் உள்ள ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.