தேவிபட்டினம்: கொரோனா அச்சத்தால், தேவிபட்டினம் நவபாஷணம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மூன்று நாட்கள் தடை நேற்றுடன், நிறைவடைந்ததால், இன்று காலை முதல் நவபாஷாணம் கடற்கரை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழிபட அனுமதி உள்ளதாக நவபாஷான அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று நாள்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று நவபாஷாணம் திறக்கப்படுவதால், ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்ய வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.