சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரயில்களில் செல்வதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ரயில் பயணத்துக்கு, 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம். 2022ம் ஆண்டு, ஜன., 13ல் போகி; 14ல் பொங்கல் பண்டிகை, 15ல் மாட்டு பொங்கல், 16ல் உழவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு, ஜன., 12ல் சொந்த ஊர் செல்ல நேற்று முன்பதிவு நடந்தது. ஜன., 13ல் பயணிக்க, இன்று முன்பதிவு நடக்கிறது. 14ம் தேதி பயணத்துக்கு நாளை முன்பதிவு செய்யலாம்.