பதிவு செய்த நாள்
16
செப்
2021
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்வது முன்னிட்டு இன்று காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. ராஜகோபுரம் முன் பக்தர்கள் வழிப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, பல லட்சம் பக்தர்கள் வருவர். நடப்பாண்டு விழா, நவ.,10ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிச.,2ல், நவ.,19ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, தீப திருவிழா பூர்வாங்க பணி தொடங்க, இன்று காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. ராஜகோபுரம் முன் பக்தர்கள் வழிப்பட்டனர். இதையடுத்து தீப விழாவில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வாகனம், பஞ்ச மூர்த்திகள் தேர், மகா தீபம் ஏற்ற நெய் கொள்முதல், திருவிழா பத்திரிகை அடித்தல் உள்ளிட்ட பணிகள், வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்யும் வேலைகளும் தொடங்கப்பட்டது.