உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் உள்ள சிவகாளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி தந்தார். பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.