புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2021 07:09
பெ.நா.பாளையம்: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அப்புலுபாளையம், வெங்கடேச பெருமாள் கோயில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து சாற்றுமுறை, நடைதிறப்பு, மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை உற்சவர் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இறைவனை வழிபட்டனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல பெரும்பாலான பெரிய பெருமாள் கோவில்களில் தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வாசல் பகுதியில் நின்றவாறே, சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் வீடு திரும்பினர்.