ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் ஒதுங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின், கோயிலில் தரிசிப்பது வழக்கம். ஆனால் நேற்று தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் ஒதுங்கி கிடந்தது. இதனை கண்ட பக்தர்கள் நீராட தயங்கினர். பின் முகம்சுளித்தபடி நீராடி சென்றனர். கோடை வெப்பத்தில் கடலில் நிலவிய தட்பவெப்ப மாறுபாட்டில் கடலுக்குள் வளர்ந்த பாசிகள் முதிர்ச்சியில் பெயர்ந்து கரை ஒதுங்குகிறது என மீனவர்கள் தெரிவித்தனர். இப்பாசிகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி, தீர்த்த கரையில் சுத்தம் செய்தனர்.