பதிவு செய்த நாள்
19
செப்
2021
02:09
திண்டுக்கல்: புரட்டாசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கிய நாள் சனிக்கிழமை என்பதால், சனி பிரதோஷ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. மேலும் அபிராமி அம்மன் கோயிலில் நத்திகேசுவரர், மூலவர் பத்மகிரீஸ்வரர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் சன்னதி, முள்ளிப்பாடி திருகாமேஷ்வரர் கோயிலிலும் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பழநி: பழநி, பாலசமுத்திரம் ரங்கசாமி மலை கரடு மேல் ரங்கசாமி பெருமாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மலையடிவாரத்தில் ரங்கசாமி பாதத்தில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சின்னாளபட்டி: மேலக் கோட்டை ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெற்றிலை காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வெண்ணெய், துதி மாலை அணிவித்து வழிபட்டனர்.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், 32 கிலோ வெண்ணெய் சாற்றுதலுடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நவாப்பட்டி ரோடு கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், மூலவருக்கு விசேஷ அலங்காரத்துடன், அபிேஷக ஆராதனைகள் நடந்தது.