பதிவு செய்த நாள்
19
செப்
2021
06:09
பல்லடம்:உள்ளூர் கோயில்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, கோவை காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, ஓராண்டுக்கு மேல் கோயில்கள் சரிவர திறக்கப்படவில்லை. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள், பண்டிகைகள் நடக்க வில்லை.
தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.கொரோனா காலத்திலும் மதுக்கடைகள் இயங்கி வந்த நிலையில், கோயில்கள் திறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கோவில்கள் முழுமையாக திறக்க அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், கோயில் வருமானத்தை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுகின்றனர். வரலாற்று கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்து, உள்ளூர் கோவில்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.