பதிவு செய்த நாள்
20
செப்
2021
10:09
சென்னை: அன்னதானம் வழங்கப்படும் கோவில்களில், சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, வாரத்தில் நான்கு நாட்களுக்கு இலையில் உணவு பரிமாறப்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுதும் உள்ள 754 கோவில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி ஆகிய பிரசித்தி பெற்ற கோவில்களில் நாள் முழுதும் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்பட்டு வந்தன.இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இன்று முதல் அனைத்து அன்னதானம் வழங்கும் கோவில்களிலும், தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாறப்படும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் தரிசனம் தவிர்க்கப்பட்டு, வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், உணவு பொட்டலங்களாக வழங்கப்படும்.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.