உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எ.ராமநாதபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக செப்.18 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புனிதநீர் கொண்டு கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காளியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. எ.ராமநாதபுரம், மேலச்செம்பட்டி மற்றும் கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.