குமரகோட்டம் முருகன் கோவிலில் பந்தக்கால் நடும் விழா விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2026 10:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று, பந்தக்கால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, 2024ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 66.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 16 வகையான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அனைத்து பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதையடுத்து, வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர், கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.