Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலை சூடும் வேளை மணவாழ்வு சிறக்க மயிலைக்கு வாங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அக்ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:09


குஜராத் தலைநகர் காந்திநகர் அருகிலுள்ள கோயில் அக்ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர். பிரம்மாண்டத்தின் வெளிப்பாடாகத் திகழும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதன் கலைநுட்பங்களில் ஈடுபட்டு தங்களையே மறந்து விடுவர். ‘குருநாதரின் வழிகாட்டுதல் இன்றி மனிதன் கடைத்தேற முடியாது’  என்னும் உண்மையை இக்கோயில் உலகிற்கு எடுத்துச் சொல்கிறது.         
குஜராத் மாநிலம் சாப்பியா என்னும் பகுதியில் 1781ல் சுவாமி நாராயணன் பிறந்தார். ஏழு வயதிலேயே வேதம், உபநிஷதம், பகவத்கீதையைக் கற்று தேர்ந்தார். பத்தாம் வயதில் காசி பண்டிதர்கள் மத்தியில் கடவுள் தத்துவங்களை விளக்கினார். 11ம் வயதில் பெற்றோரைத் துறந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் துண்டைத் தவிர வேறு ஆடை இன்றி இமயம் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தார். மீண்டும் குஜராத்திற்கு வந்த போது வயது 18. ஏழு ஆண்டுகளில் இவர் நடந்த துாரம் 12 ஆயிரம் கி.மீ., ராமானந்த சுவாமி என்னும் துறவி இவரது ஆன்மிக ஈடுபாடு கண்டு நெகிழ்ச்சி அடைந்தார். தனது சீடர்களிடம், ‘இனி இவரே உங்கள் குரு’  என்றும் அறிவித்தார். சுவாமி நாராயணனுக்கு ‘சகஜானந்தா’ எனப் பெயர் சூட்டினார். அவரது மேன்மையை உணர்ந்த ஆயிரக்கணக்கான சாதுக்கள்   சுவாமி நாராயணனை தெய்வமாக வழிபட்டனர். 1830 வரை வாழ்ந்த அந்த மகானின் நினைவாக கட்டப்பட்ட கோயில் இது.  
1992 அக்.30ல் திறக்கப்பட்ட இக்கோயிலின் பரப்பு 23 ஏக்கர். இங்கு சுவாமி நாராயண் நினைவிடம், "ஆர்ஷ் எனப்படும் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், பூங்கா ஆகியவை உள்ளன. ராஜஸ்தான் மார்பிளால் ஆன நினைவிடத்தின் நடுவில் சுவாமி நாராயணனுக்கு ஏழடி உயர தங்கச்சிலை உள்ளது. கோயிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டு ஆனது. 6 ஆயிரம் மெட்ரிக் டன் (60 லட்சம் கிலோ) இளஞ்சிவப்பு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கோயில் 240 அடி நீளம், 131 அடி அகலம், 108 அடி உயரம் கொண்டது.
சுவாமி நாராயணனின் வரலாறு, அவரது போதனைகளை விளக்கும் அரங்கம் உள்ளது. இங்கு ராமாயணம், மகாபாரத காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  பக்தர்கள் பாடுவதற்காக ‘பிரேமானந்த்’ என்னும் அரங்கம் உள்ளது. திரையரங்கம் ஒன்றும் உள்ளது. ‘குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் மனிதன் கடைத்தேற முடியாது’ என்பதை விளக்கும் திரைப்படம் காட்டப்படுகிறது. 14 திரைகளில் 22 ஸ்லைடு வீடியோ புரொஜக்டர்கள் மூலம் திரையிடுகின்றனர்.
15 ஏக்கர் பரப்பில் அமைந்த பூங்காவில் உள்ள நீர்நிலையை கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக கருதுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் பாற்கடலை கடையும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், கிராமநலன், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை, பண்பாடு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.  
எப்படி செல்வது:
* குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 20 கி.மீ.,
* காந்தி நகரில் இருந்து 7 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar