மதுரை : மதுரை விளாச்சேரி பட்டாபிராமர் கோயிலில் பெருமாள் கோயிலை தானம் கொடுத்த, அக்கோயிலை புனரமைத்தது குறித்த 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்றை மதுரை கோயில் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆய்வாளர் தேவி, கல்வெட்டு ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்.
அவர்கள் கூறியதாவது: கோயில் அர்த்தமண்டபம் முகப்பு சுவரில் உள்ள கல்வெட்டை மூத்த தொல்லியல் அறிஞர் ராஜகோபால், கோயில் கட்டடம், சிற்பத்துறை சுந்தரேஸ்வரி, அருணா ஆகியோருடன் ஆய்வு செய்தோம்.சாலிவாகன சகாப்தம், குரோதி வருடம், சோபகிருது போன்ற யுக ஆண்டை குறிக்கும் வார்த்தைகளை கொண்ட அந்த கல்வெட்டில் கி.பி., 1484 ருத்திராவதியம்மாள் என்பவர் விளாச்சேரி அக்ரஹாரத்தில் இருந்த பெருமாள் கோயிலை தானம் செய்தது, 1903ல் அக்கிராமத்து மக்கள் கோயிலை புனரமைப்பு செய்தது குறித்து 8 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது என்றனர்.