கைலாசநாத சுவாமி கோவிலில் அரசு - வேம்பு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2021 03:09
மயிலாடுதுறை : சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாத சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி அரசு - வேம்பு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கல்யாணி அம்பிகா மேத கைலாசநாத சுவாமி ஆலையம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவகிரகங்கள் தனித்தனியே வீற்றிருப்பது தனி சிறப்பாகும். இக்கோவில் குளக்கரையில் அரசமர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.இந்த அரச மரத்தோடு இணைந்து வேப்ப மரமும் வளர்ந்து பின்னி பினைந்து காட்சியளிக்கிறது. இன்று சங்கடாஹர சதூர்த்தியை முன்னிட்டு அரசமர விநாயகருக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் உலக நன்மை வேண்டியும், திருமண தடை நீங்கவும், தொழில் விருத்தி வேண்டியும் கணபதி ஹோமம்,கணபதி அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அரசு - வேம்பு மரத்திற்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது அரச- வேம்பு மரங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அரசமரத்திற்கு வேட்டியும் வேப்பமரத்தை பெண்ணாக பாவித்து சேலையும் மற்றும் மாங்கல்யம் அறிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 1008 கொழுக்கட்டை விநாயகருக்கு படையளிடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர் .