திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடால் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தனியார் கோயில்களில் பக்தர்கள் கொரோனா விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர்.