சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பில் அய்யா வைகுண்டர் திருவிழா நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு நிழல் தாங்கலில் அய்யா வைகுண்டர் அருளிய திருவிழா நான்கு நாட்கள் நடந்தது. முதல் நாள் திருவிழாவில் அய்யா வாகன பவனி, இரண்டாம் நாள் கருட வாகன பவனியும், அய்யாவின் உருவ பவனியும் நடைபெற்றது. இதில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோலாட்டம் நடத்தி, அய்யா பாடல்களைப் பாடி நகர் முழுவதும் வனியாக வந்து திருவிழாவைக் கொண்டாடினர் . விழா ஏற்பாடுகளை சங்கரன் குடியிருப்பு அய்யா வழி அன்பு கொடிமக்கள் மற்றும் வைகுண்டர் பதி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.