கண்டவராயன்பட்டி: கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் முதல் முறையாக திருவாசக முற்றோதல் நடந்தது. மூலவருக்கு காலை 9:00 மணிக்கு கார்த்திகை அபிேஷகம் நடந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு திருவாசக முற்றோதல் துவங்கியது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 5:00 மணி வரை வரை நடந்த மகளிர் பாடிய முற்றோதலில் 11 ஆயிரம் திருவாசக பாடல்கள் பாடப்பெற்றன.ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர் சுப்ரமணியன் செய்தார்.