புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2021 03:09
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், பழையபுதூரில் உள்ள ஆதி மூர்த்தி பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறிய கோவில்களை தவிர, பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.