பதிவு செய்த நாள்
26
செப்
2021
03:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில் நேற்று, புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாசலபதி, சீதாதேவி ஸ்ரீ ராமருக்கு அன்னம் பரிமாறும் திருக்காட்சி அலங்காரம் நடந்தது.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ குருவாயூரப்பன் அலங்காரம் செய்யப்பட்டது. மீனாட்சிபுரம் ராமர் பண்ணை கோவிலில், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில், சாத்துார் பெருமாள்சுவாமி கோவிலில், அதிகாலையில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பெருமாளை தரிசித்தனர்.