கோவிலை இடிக்கும் அரசு; பிரார்த்தனை கூடங்களுக்கு மட்டும் தயக்கம் ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 04:09
உடுப்பி : சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவிலை இடிக்கும் அரசு, நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை கூடங்களை இடிக்க தயக்கம் காட்டுவது ஏன்? என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக தலைமை செயலர் உத்தரவையடுத்து, மைசூரு நஞ்சன்கூடில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாதேவம்மா கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, வழிபாட்டு தலங்களை இடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து உடுப்பியில் பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் நேற்று கூறியதாவது:நஞ்சன்கூடு ஹுச்சகனி மஹாதேவம்மா கோவில் கட்ட மடம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்படும்.நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை கூடங்களை இடிக்க அரசு தயக்கம் காட்டுகிறது. ஆனால் பிரசித்தி பெற்ற கோவிலை இடிக்கிறது.இதன் மூலம் ஹிந்துக்கள் ஒடுக்கப்படுவதும், அவர்களுக்கு எதிரான ஏமாற்று திட்டங்கள் நடப்பதும் தெளிவாக காண முடிகிறது. இதை சரிப்படுத்த சரியான சட்டம் அமல்படுத்த வேண்டும்.தவறான வழிகாட்டுதலால் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. கோவில்களை பாதுகாக்க சட்டம் தேவை.இதுவே வேறு வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் உலகமே கொதித்திருக்கும்.ஹிந்துக்கள் எப்போதும் அமைதியை விரும்புவோர். இதை அவர்களின் பலவீனமாக கருதக்கூடாது. கோவில்களின் நிலத்தை கண்டுபிடித்து, பட்டா வினியோகிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.