திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரி ஈஸ்வரன் கோயில், பட்டாபிஷேக ராமர் கோயில்களில் மீனாட்சி உழவாரப்பணி குழுவை சேர்ந்த சண்முகம், சிவசங்கரி, முருகதாஸ், இளமதி, தேவி, சாந்தி, சக்தி பாலா, அபிராமி உள்ளிட்டோர் துாய்மை பணிகளில் ஈடுபட்டனர்.கோயில் குருக்கள் நீலகண்டன், நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன் ஆகியோர் விநாயகர் சிலைகளை பரிசளித்தனர்.