விஜயநகரா : உலக சுற்றுலா தினத்தை ஒட்டி, ஹம்பி நகருக்கு நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் நேற்று படையெடுத்தனர்.
விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட்டில் விஜயநகர பேரரசர்கள் ஆட்சி புரிந்த ஹம்பியில் உள்ள புராதன நினைவு சின்னங்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் என்றே கூறலாம்.யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாசார அமைப்பால், பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகும்.இந்நிலையில், உலக சுற்றுலா தினத்தை ஒட்டி, ஹம்பி நகருக்கு நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் நேற்று படையெடுத்தனர்.கல் தேர், விருபாக் ஷா கோவில், துங்கபத்ரா ஆறு, குன்றுகள், தெனாலிராமன் மண்டபம், மாதங்கா மலை என பல்வேறு ஸ்தலங்களை பார்த்து மகிழ்ந்தனர். ஏராளமானோர் வந்ததால், டிக்கெட் கட்டணம் மூலம் தொல்லியல் துறைக்கும் நல்ல வருமானம் கிடைத்தது.அருகிலேயே அடல் பிஹாரி வாஜ்பாய் உயிரியியல் பூங்காவும், கரடி சபாரியும் இருப்பதால் சுற்றுலா பயணியர் அங்கு சென்று பொழுதை போக்கினர்.