கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், கும்பாபிஷேக கமிட்டி இரண்டாம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கவுர தலைவர் மேலை பழநியப்பன் தலைமை வகித்தார். நான்கு கால யாக பூஜை செய்து, கோபுர சிற்ப சித?லங்கள் சீர் செய்து பல வர்ணம் பூசுதல், ஆலயம் முழுதும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும். பண்டரிபுரம் சென்று புனித நீர் எடுத்து வருதல் என்பன போன்றவை ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. முரளி சிவாச்சாரியார், கருப்பையா ஸ்தபதி ஆகியோரிடம் பெற்றுள்ள பணி மதிப்பீட்டு பட்டியல் குறித்து விளக்கப்பட்டது. கமிட்டி தலைவர் ரமணன், நிர்வாகி கள் சந்தான கிருஷ்ணன், குப்புசாமி, மணி, குணசேகரன், சதீஷ், மோகன், மெய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.