அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 05:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மூன்று நாட்களுக்கு பிறகு, நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சத்தால், வழிபாட்டுத் தலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரண்டாம் பிரகாரத்தில், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.