நத்தம் மாரியம்மன் கோவிலில் சேதமடைந்துள்ள தண்ணீர் தொட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 05:09
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள, நத்தம் மாரியம்மன் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலில் மாசி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா 15 நாட்கள் நடக்கும். மேலும் இக்கோயிலில் திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக் கடனை செலுத்துவர். மேலும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் இங்கு பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம். இருப்பினும் இந்தக் கோயிலுக்கு எதிரே உள்ள தண்ணீர் டேங்க் பல நாட்களாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது. எனவே இங்கு வரும் பக்தர்கள் தண்ணீர் தேவைக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.