பதிவு செய்த நாள்
28
ஜூன்
2012
10:06
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு ஹோமங்கள் நடந்தன. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 8.30 மணிக்கு கடஸ்தாபனம், ஹோமம், பகவானின் திருமந்திர ஜபம், மகா தீபாராதனை நடந்தது. 10.45 மணிக்கு பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு சென்னை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.45 மணிக்கு தஞ்சாவூர் ஜானகி சுப்ரமணியம் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (28ம் தேதி) காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், 11.15 மணிக்கு பக்தர்கள் பஜனை, மாலை 4 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவியரின் யோகியே தெய்வம் என்ற தலைப்பில் நாடகம், 5.15 மணிக்கு ஸ்ரீ முரளிதர சுவாமிகள், பகவான் யோகி ராம்சுரத்குமார் உற்சவ மூர்த்திக்கு தங்கக் கிரீடம் சாற்றி, வேத பாட சாலையை திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு பத்ராசல ராமதாசர் சரித்திரம் பற்றி உபன்யாசம் நடக்கிறது. இரவு 8.15 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் ஆசிரம வளாகத்தில் உலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.