பதிவு செய்த நாள்
01
அக்
2021
10:10
கோவை : நவராத்திரி விழாவுக்கான பொம்மை தயாரிப்பும், விற்பனையும் கோவையில் சூடுபிடித்துள்ளது. கோவையில் செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் நவராத்திரி விழாவுக்கான பொம்மைகள் தயாரிப்பு விறுவிறுப்படைந்துள்ளது. துர்கா, சரஸ்வதி, லட்சுமி சிலை, திருமண ஊர்வல செட், வாத்திய செட், நாட்டிய செட், கொரோனாதேவி சிலை, மருத்துவமனை, டாக்டர்கள், கல்லுாரியில் மாணவர்கள் பாடம் கற்பது போன்ற பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.25 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, பேப்பர் கூழ், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. ஆர்டர் பெற்று, தேவைக்கேற்பவும் தயாரித்து கொடுக்கப்படுகிறது.