பதிவு செய்த நாள்
01
அக்
2021
10:10
நாகர்கோவில்: குமரி மாவட்டம் மயிலாடியில் தயார் செய்யப்பட்ட அக்ஷர தேவி சிலைகள் இன்று திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது.
பவுர்ணமி காவு தேவி கோவில். இந்த கோவில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும் என்பது தனிச்சிறப்பு. இந்த கோவிலில் மலையாளத்தில் உள்ள 51 எழுத்துக்களையும், அதற்கான கடவுள்களையும் சிற்பத்தில் செதுக்கி தனி கோவில் அமைக்க உள்ளனர். இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள மதன் குமார்
என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 51 சிற்பங்களையும் செதுக்கி உள்ளார். நேற்று அந்த சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன்
கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று அதிகாலை திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச்செல்கிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகி புவனசந்திரன் கூறுகையில், "கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சரஸ்வதி தேவி த என்ற எழுத்துக்கு அதிபதி ஆவார். அதனால் தான் சரஸ்வதி தேவி தமஸ்யா தேவி என அழைக்கப்படுகிறார். இதுபோன்று ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் உள்ளன. மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, கன்னடம் ஆகிய மொழிகளில் 51 எழுத்துக்கள் உள்ளன. உலகத்திலேயே முதல் முறையாக எழுத்துக்கு என்று முதல்முறையாக திருவனந்தபுரம் பவுர்ணமி காவு கோயிலில் தனி க யில் அமைக்கப்பட உள்ள து. இது மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும், தாய் மொழி கற்பவர்களுக்கும் , கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வழிபட ஏற்ற தலம் ஆக இருக்கும். கன்னியாகுமரியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் 51 அக்ஷர தேவதைகளும் தை மாதத்திற்குப்பிறகு உத்தராயண காலத்தில் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன" என்றார்.