பதிவு செய்த நாள்
01
அக்
2021
03:10
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைச்சாவடி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம், அதே பகுதியில் உள்ளது. அங்குள்ள சர்வே எண், 8ல், 6,908 சதுரடி இடத்தை சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், வாடகை கொடுக்காததால், காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி, கட்டடம், காலிமனையை கோவிலுக்கு எடுக்கும் பணி நேற்று நடந்தது. சேலம் ஹிந்து சமய அறநிலையத்து?றை உதவி கமிஷனர் உமாதேவி தலைமையில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து, அதில் இருந்த பழைய கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். பின், கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.