சித்தூர்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .இந்நிலையில் பக்தர்கள் கடந்த 36 நாட்களில் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியப் பணத்தை எண்ணும் பணியில் இன்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு முன்னிலையில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை என்னும் பணியில் ஈடுபட்டனர் .இதில் பணமாக 67 லட்சத்து 4 ஆயிரத்து 600 ரூபாய், தங்கம் 43.200 கிராம் வெள்ளி 439 கிலோ 400 கிராம் வெளிநாட்டு பணம் 9 டாலர்கள் இருந்ததாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.