பதிவு செய்த நாள்
02
அக்
2021
04:10
பெங்களூரு: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நகரின் பல கோவில்களில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. வரும் 6 முதல் விழா துவங்குகிறது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் – சிவாஜி நகர் :
அக் டோபர் 6ல் ம ஹா அபிேஷகம், மூலவருக்கு வெள்ளி கவச மலர் அலங்காரம், மஹா மங்களாரத்தி, உற்சவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை, அன்னதானம்; அக்டோபர் 7ல் மஞ்சள்; 8ல் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன். வரும 9ல் காமாட்சி அம்மன்; 10ல் சாரதாம்பிகை அம்மன்; 11ல் சிவலிங்க பூஜை; 12ல் கருமாரியம்மன்; 13ல் துர்கா பரமேஸ்வரி அம்மன்; 14 ல் மஹாலட்சுமி; 15ல் சரஸ்வதி அலங்காரம் செய்யப்படுகிறது.
சுயம்பு காளியம்மன் – ஹலசூரு: அக்டோபர் 6ல் விநாயகர், 7ல் திருச்செந்துார் முருகன், 8ல் தனலட்சுமி, 9ல் சாகம்பரி (அன்னபூர்னேஸ்வரி), 10ல் சமயபுரம் மாரியம்மன், 11ல் மதுரை மீனாட்சி, 12ல் தேவிகருமாரி அம்மன்; 13ல் சரஸ்வதி. வரும், 14ல் கோல்கட்டா காளி, 15ல் ராஜராஜேஸ்வரி, 16ல் லட்சுமி நரசிம்மசுவாமி; 17ல் திருப்பதி வெங்கடேஸ்வரர்; 18ல் சோமேஸ்வரர் (அன்ன அலங்காரம்), 19ல் தேவி கெம்பம்மா அலங்காரம். அக்டோபர் 10ல் காலை 8:00 முதல் மதியம் 12:00 வரை மஹா சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.